'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான அர்ஜூன் ரெட்டி என்கிற சூப்பர் ஹிட் படத்தில் நடித்தவர் விஜய் தேவரகொண்டா. மகாநடி படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்த அவருக்கு, கீதா கோவிந்தம் என்ற படமும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அந்தப்படம் 70 கோடி ரூபாய் வசூலித்தது. அதையடுத்து அவர் நடித்து வெளியான டாக்ஸிவாலாவும் சூப்பர் ஹிட்டாகி இருக்கிறது.
இந்நிலையில், தற்போது அவர் கிராந்தி மகாதேவ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அர்ஜூன் ரெட்டிக்குப் பிறகு ரூ. 3 கோடி சம்பளம் வாங்கி வந்த விஜய தேவரகொண்டா, கீதா கோவிந்தம் வெற்றிக்குப்பிறகு தனது சம்பளத்தை 7.5 கோடியாக உயர்த்தினார். தற்போது ரூ.9 கோடியாக சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக டோலிவுட்டில் தகவல் வெளியாகி இருக்கிறது.