ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உலக அளவில், யு டியுபில் திரைப்படங்களின் டிரைலர், டீசர்களை வெளியிட ஆரம்பித்தபின் அவை 24 மணி நேரத்தில் படைக்கும் சாதனை, அவற்றின் பார்வைகள், லைக்குகள் என அந்த சாதனைகளை சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அந்த விதத்தில் ஹாலிவுட் படங்கள் அசைக்க முடியாத சாதனைகளைப் படைத்து வந்தன. அவற்றையும் இந்தியப் படங்கள் அசைத்துப் பார்த்து, ஹாலிவுட் படங்களுடன் போட்டி போட்டு வருகின்றன.
நவம்பர் மாதத்தில் வெளியான 'ஜீரோ' ஹிந்திப் படத்தின் டிரைலர் 19 லட்சம் லைக்குகளைப் பெற்று உலக அளவில் அதிக லைக்குகளைப் பெற்ற டிரைலர்களின் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அந்த சாதனையை 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' டிரைலர் ஒரு வாரத்திற்குள் முறியடித்து விட்டது. இப்போது 30 லட்சம் லைக்குகளுடன் இந்த டிரைலர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 6 கோடியே 91 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
தற்போது முதலிடத்தில் கடந்த வருடம் வெளியான 'அவெஞ்சர் இன்பினிட்டி வார்' டிரைலர் உள்ளது. அந்த டிரைலர் 34 லட்சம் லைக்குகளையும், 21 கோடியே 63 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளது. 'இன்பினிட்டி வார்' டிரைலரின் லைக்குகளை முறியடிக்க 'என்ட்கேம்' டிரைலருக்கு இன்னும் 4 லட்சம் லைக்குகளே தேவை. அதை 'என்ட்கேம்' சீக்கிரமே முறியடிக்கும் என எதிர்பார்க்கலாம்.