போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் நடிப்பில் புறம்போக்கு படத்தை இயக்கிய எஸ்பி ஜனநாதனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. புறம்போக்கு படம் சிறந்த படமாக பேசப்பட்டாலும் வணிக வெற்றியை கொடுக்கவில்லை.
இருந்தாலும் எஸ்பி ஜனநாதனை இயக்குனராக வைத்து ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டார் விஜய்சேதுபதி. அதைத்தொடர்ந்து படத்தின் கதை விவாதம் பல மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு அந்தப்படத்தில் நடிக்க தயாராகி வந்தார் விஜய் சேதுபதி.
இந்நிலையில் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தபோது விஜய் சேதுபதிக்கு ஒரு அறிவுரை வழங்கியிருக்கிறார் ரஜினி. அதாவது தற்போதைய சூழலில் சொந்தப்படம் எடுப்பது அவ்வளவு நல்ல விஷயம் இல்லை என்று கூறியிருக்கிறார். இதனால், விஜய் சேதுபதி எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் சொந்தப் படம் எடுக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டார்.
அதைக்கேட்டதும் எஸ்பி ஜனநாதன் பயங்கரமாக அப்செட் ஆகி விட்டதாக தகவல். தான் தயாரிக்காவிட்டாலும் வேறு ஒரு பெரிய தயாரிப்பாளரை எஸ்பி ஜனநாதனுக்கு சிபாரிசு செய்வதாக வாக்கு கொடுத்திருக்கிறாராம் விஜய் சேதுபதி.