தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் பரீட்சார்த்தமான முயற்சிகள் வரவர அரிதாகி வருகின்றன. வெகு அபூர்வமாகத்தான் இப்படியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த குறையை போக்கும் வகையில் கார்த்தி நடிக்கும் 18வது படம் அமைவதற்கு வாய்ப்புள்ளது.
இன்னும் பெயர் சூட்டப்படாததினால் கார்த்தி18 என்று குறிப்பிடப்பட்டு வரும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். 'மாநகரம்' என்ற வெற்றிப்படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர் இவர். நரேன் (அஞ்சாதே), ரமணா, ஜார்ஜ் மரியம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ள இந்தப்படத்தில் கதாநாயகியே இல்லை என்பதுதான் வியப்பான தகவல்.
கார்த்தி என்ற கமர்ஷியல் ஹீரோ நடிக்கும் படத்தில் கதாநாயகி இல்லையா? படத்தில் 70 சதவிகிதத்துக்கு மேல் ஆக்ஷன் காட்சிகள் தான். முழுக்க முழுக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு திரைக்கதை உருவாக்கப்பட்டிருப்பதால் காதல் காட்சிகளுக்கு வேலை இல்லையாம். இப்படி ஒரு துணிச்சலான திரைக்கதை அமைப்புதான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க கார்த்தியை தூண்டியதாக சொல்கிறார்கள் படக்குழுவினர்.
இப்படத்தின் சண்டைக்காட்சிகளை, இரட்டை ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவ் உருவாக்குகிறார்கள். இரும்புத்திரை, காற்றின் மொழி படங்களுக்கு வசனம் எழுதிய பொன் பார்த்திபன் இப்படத்திற்கும் வசனம் எழுதுகிறார். ரோசாப்பூ ரவிக்கைக்காரி உட்பட பல படங்களைத் தயாரித்த பழம்பெரும் படநிறுவனமான விவேகானந்தா பிக்சர்ஸ் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் இணைந்து, இப்படத்தை தயாரிக்கிறது.