'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த 3௦ வருடங்களுக்கு மேலாக மலையாள திரையுலகில் எதிர் எதிர் நட்சத்திரங்களாக இருந்து வரும் மோகன்லாலும், மம்முட்டியும் நிஜ வாழ்க்கையில் அதீத நட்பு பாராட்டி வருகிறார்கள். இவர்களது அடுத்த தலைமுறையான, மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் மற்றும் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் இருவரும் இளம் முன்னணி நடிகர்களாக மாறிவிட்டாலும் தங்களது பெற்றோர் போன்றே தாங்களும் நட்பை கடைபிடித்து வருகின்றனர்.
இதற்கு சமீபத்திய உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் மோகன்லால் நடித்துள்ள 'லூசிபர்' படத்தின் டீசரை இன்று மம்முட்டி வெளியிட்டுள்ளார். அதேபோல மோகன்லால் மகன் பிரணவ் நடித்துள்ள 'இருபத்தியோன்னாம் நூற்றாண்டு' படத்தின் டீசரை துல்கர் சல்மான் வெளியிட இருக்கிறார். தங்களுக்கு பின்னும் தங்கள் வாரிசுகள் நட்புறவுடன் வளர்வதை பார்த்து ஜாம்பவான்கள் இருவரும் சந்தோஷப்படுகிறார்களாம்.