சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி |
தொடர்ந்து படங்கள் இயக்கிய வந்த சமுத்திரகனிக்கு நடிப்பில் மார்க்கெட்டையும் ஆர்வத்தையும் உருவாக்கிய படம் சாட்டை. எம்.அன்பழகன் இயக்கினார். பள்ளி ஆசிரியராக நடித்த சமுத்திரகனியின் நடிப்பு, பெரிய அளவில் பேசப்பட்டது. அதையடுத்து அவர் இயக்கத்தை குறைத்து விட்டு நடிப்பில் அதிகப்படியான கவனம் செலுத்தினார்.
இந்த நிலையில், தற்போது சாட்டை படத்தின் 2ஆம் பாகம் உருவாகிறது. முதல் பாகத்தை இயக்கிய எம்.அன்பழகனும், சமுத்திரகனியும் மீண்டும் இணைகிறார்கள். இந்த படமும் இன்றைய பள்ளி மாணவர்கள் பிரச்சினையை மையமாக கொண்ட கதையில் தான் உருவாகிறது.
இரண்டாம் பாகத்தில் உருவாகும் படம் என்கிறபோதும் இந்த படத்திற்கு சாட்டை-2 என்று தலைப்பு வைக்காமல் அடுத்த சாட்டை என்று பெயர் வைத்துள்ளனர்.