ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
2018ம் ஆண்டில் இந்தியர்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் பிரியா வாரியர் முதல் இடத்தை பிடித்துள்ளார். அதற்கு காரணம் அவரது ஒரே ஒரு புருவ அசைவு. ஒரு அடார் லவ் என்ற மலையாளப்படத்தில் அறிமுகமான பிரியா வாரியார். அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் தன் காதலனை பார்த்து புருவத்தை உயர்த்துகிற காட்சியும், அதைத் தொடர்ந்து இளமையும், காதலுலும் தழும்பும் அவரது முகபாவமும் இணையத்தில் வைரலாக பரவியது.
அதுமட்டுமல்ல அந்த பாடல் எங்கள் மதத்தையும், மனதையும் புண்படுத்துகிறது என்று மலபார் முஸ்லிம்கள் கொடி பிடிக்க, பிரியா வாரியரின் புருவ அசைவு இளைஞர்களை கெடுக்கிறது என்று பல இடங்களில் வழக்கு பதிவாக ஏகத்துக்கு டிரண்டிங் ஆனார் பிரியா வாரியார். இதனால் இந்தியாவை தாண்டியும் பிரியா வாரியரை தேட ஆரம்பித்தார்கள். இதனால் கூகுளில் 2018ல் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் பிரியா வாரியர் முதல் இடம் பிடித்துள்ளார்.
இரண்டாவது இடம் பிரிங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோன்ஸ். இந்தியாவில் இத்தனை அழகான ஆண்கள் இருக்க பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் ஒரு மாப்பிள்ளையை பிடித்திருக்கிறாரே. பிரியங்கா சோப்ராவின் மனம் கவர்ந்த அந்த மணாளன் யார் என்று ரசிக மகா ஜனங்கள் கூகுளில் தேட அவர் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார்.
மூன்றாது இடம் 2.0 படத்திற்கு. இந்தியாவின் பிரமாண்ட படமாக உருவாகி உள்ள இந்தப் படத்தின் தகவல்கள், டீசர், படங்களை தேடி இருக்கிறார்கள்.
4வது இடம் புதுப் மணப்பெண் பிரியங்கா சோப்ரா. அவரது திருமண படங்களை தேடி தேடி பார்த்திருக்கிறார்கள். 5வது இடம் தீபிகா படுகோனேவுக்கு. அவரது திருமணத்தை ஆர்வமாக பார்திருக்கிறார்கள்.
இந்த பட்டியலில் அவென்ஜ்சர் இன்பினிட்டி, பிளாக் பேந்தர், டெட்பூல் ஆகிய ஹாலிவுட் படங்களும், உலககோப்பை ஐபிஎல் கிரிக்கெட் போட்டியும், மீ டூ விவகாரங்களும் இடம் பிடித்துள்ளது.