விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
தமிழ், மலையாளம் மொழிகளில் கிருஷ்ணம் என்ற படம் தயாராகி உள்ளது. கேரளாவைச் சேர்ந்த பி.என்.பலராம் என்ற தொழில் அதிபர் தயாரித்துள்ளார். தன் குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு பக்தி அனுபவத்தை படமாக்க விரும்பி, தயாரிப்பாளராக மாறி படத்தை தயாரித்துள்ளார்.
அவரது மகன் அக்ஷய் கிருஷ்ணனுக்கு இதயத்தில் ஒரு அபூர்வ நோய் நோய், 10 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே வரும் நோய் அது. இதற்கு அறுவை சிகிச்சை தான் தீர்வு. ஆனால் அறுவை சிகிச்சை வெற்றி பெற 10 சதவிகித வாய்ப்புகள் தான் உண்டு. கேரளாவின் பிரபல டாக்டர் சுனில் தலைமையில் அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட 2 டாக்டர்கள் துணையுடன் அறுவைச் சிகிச்சை நடந்தபோது, பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. அதிலிருந்து தன் மகனை காப்பாற்றியது குருவாயூர் கிருஷ்ணன் தான் என்று அவர் நம்பினார்.
குருவாயூரப்பன் தன் மகனை காப்பாற்றிய அனுபவத்தை படமாக எடுத்து, இந்த உலகுக்கு காட்ட வேண்டும் என்று விரும்பினார். அதுதான் தமிழ், மலையாள மொழிகளில் ஒரே நேரத்தில் 'கிருஷ்ணம்' படமாக தயாராகியுள்ளது. அறுவை சிகிச்சை நடந்து அபூர்வ நோயிலிருந்து குணமான மகன் அக்ஷய் கிருஷ்ணனை, நாயகனாக நடிக்க வைத்துள்ளார். நாயகியாக ஐஸ்வர்யா உல்லாஸ் நடித்துள்ளார். மற்றும் சாய்குமார், சாந்தி கிருஷ்ணா, விஜய் பாபு, வினீத், ராஜீவ் பணிக்கர், ஜெயகுமார், அஞ்சலி உபாசனா ஆகியோரும் நடித்துள்ளனர். திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கியிருப்பவர் தினேஷ் பாபு. படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தமிழில் வெளியிடுகிறது.