ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
ரஜினி அரசியல் பிரவேசத்தை அறிவித்தபோது அவரை விமர்சித்தவர்களில் நடிகை கஸ்தூரியும் ஒருவர். அதனால் அதையடுத்து கஸ்தூரிக்கும், ரஜினி ரசிகர்களுக்குமிடையே டுவிட்டர் போர் நடந்தது. பின்னர், ரஜினியை மரியாதை நிமித்தமாக சந்தித்து அந்த போருக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்
இந்த நிலையில், இன்று ரஜினியின் 69 பிறந்த நாள் என்பதால் அவரை பல பிரபலங்களும் வாழ்த்தி வரும் நிலையில், கஸ்தூரியும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்திருப்பவர், அவருக்கு ஒரு பரிசையும் கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள கஸ்தூரி, மானு மிஷன் முயற்சியில், லைகா நிறுவனத்தின் ஆதரவில், ஏழை பிள்ளைகள் சிலரை தேர்வு செய்து, ரஜினி நடித்த 2.0 படம் பார்க்க அழைத்து சென்றேன். அந்த 3 மணி நேரமும் வேதனையை மறந்து உற்சாகமாக மகிழ்ந்த அந்த குழந்தைகளின் சிரிப்பையும், அவர்கள் குடும்பத்தினரின் ஆனந்த கண்ணீரையும் ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் பரிசாக்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.