மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பிரபலமான யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் மூலம் இன்னும் பிரபலமானார். நோட்டா படத்திற்கு பிறகு ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது, கழுகு 2, மஹத் உடன் ஒரு படம் என சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது யோகிபாபு நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
தற்போது பல படங்களில் காமெடியனாக நடித்து வரும் யோகிபாபு, தர்மபிரபு, கூர்கா போன்ற படங்களில் கதையின் நாயகனாக நடிக்கிறார். இதையடுத்து ஜாம்பி என்ற இன்னொரு படத்திலும் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார். புவன் நல்லான் இயக்கும் இந்த படத்தில் யோகிபாபு போன்று யாஷிகாவும் கதையின் நாயகியாக நடிக்கிறார். காமெடி திரில்லர் கதையில் இப்படம் உருவாகிறது.
பிரேம்ஜி அமரன் இசையமைக்க, எஸ்3 பிக்சரஸ் சார்பாக வசந்த் மகாலிங்கம், முத்துக்குமார் இணைந்து தயாரிக்கிறார்கள்.