'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
விஜய், அஜித் படங்களைத் தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். இந்தப்படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட்டடித்திருப்பதால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் அனிருத்திற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ரஜினியைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்திற்கும் அனிருத் இசையமைப்பதாக செய்திகள் வெளியாகி வந்தபோதும், அதை அப்படக்குழுவினர் யாரும் உறுதிப்படுத்தவில்லை.
அனிருத் அளித்த ஒரு பேட்டியில், இந்தியன்-2 படத்திற்கு இசையமைப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ந்தேதி முதல் தொடங்குகிறது.