ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தியத் திரையுலகம் வியந்து பார்க்கும் ஒரு நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். 40 வருடங்களாக சினிமாவில் தொடர்ந்து கதாநாயகனாக ஜொலித்துக் கொண்டு இந்த வயதிலும் இந்தியத் திரையுலக வசூல் மன்னனாக தொடர்கிறார். ரஜினி, இன்று 69வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது ரசிகர்கள் ரத்ததானம், நலத்திட்ட உதவிகள் என செய்து வருகிறார்கள்.
மற்றொருபுறம் ரசிகர்கள் தொடங்கி, அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த திமுக., தலைவர் ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்சய் குமார், மோகன்லால், இயக்குநர்கள் ஷங்கர், முருகதாஸ், உள்ளிட்டோருக்கு டுவிட்டரில் அவர்கள் பதிவிட்ட வாழ்த்து செய்தியை ரீ-டுவீட் செய்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்துள்ளார்.