‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ரஜினி நடிப்பில் கடந்த மாதம் வெளியான '2.0' படத்தைத் தொடர்ந்து வருகிற பொங்கல் விடுமுறையில் 'பேட்ட' படம் ரிலீஸாக இருக்கிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.
பேட்ட படம் தான் அனிருத் இசையமைத்துள்ள முதல் ரஜினி படம். அதற்கடுத்து ரஜினி நடிக்கும் படத்துக்கும் இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்துக்கே கிடைத்திருக்கிறது.
'பேட்ட' படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ஹிட்டான நிலையில், 'அடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் அனிருத்' என தனுஷ் சொன்னதாக பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சொன்னார் ரஜினி.
பேட்ட படத்தின் பாடல்கள், தீம் மியூஸிக் ரஜினிக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். எனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கும் படத்துக்கும் அனிருத்தை இசையமைப்பாளராக சிபாரிசு செய்துள்ளார் ரஜினி. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
முதலில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக சொல்லப்பட்டது. பிறகு லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிப்பதாக தகவல் வெளியானது. தற்போது தயாரிப்பாளர் யார் என்பதை ரஜினி இன்னும் முடிவு செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது.