Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

பிறந்த நாள்: நியூ வெர்சன் ரீலோடட் ரஜினி 3.0

12 டிச, 2018 - 11:04 IST
எழுத்தின் அளவு:
Happy-Birthday-to-Rajini-:-Rajini-special-3.0

நடிகர் ரஜியின் பிறந்த நாள் இன்று. அனேகமாக அடுத்த பிறந்த நாளின் போது அவர் அரசியலில், அதிகாரத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கலாம். அவரது பிறந்த நாளையொட்டி அவரது வாழ்க்கை பாதையின் சின்ன ரீவைண்ட்...

சிவாஜிராவ் கெய்க்ட்வாட் பிறந்தது 1950 டிசம்பர் 12. நேரம் நள்ளிரவு 11.54 மணி. மகரராசி, திருவோண நட்சத்திரம். ரஜினிகாந்த் என்று பெயர் சூட்டியது கே.பாலச்சந்தர். பெங்களூர் கோவிபுரம் அரசு கன்னட மாதிரி ஆரம்ப பள்ளியில் படிப்பு. ஆச்சார்யா பாடசாலா பப்ளிக் ஸ்கூலில் உயர்நிலை கல்வி. படித்தது பியூசி வரை. முதலில் கார்பெண்ட்டர் வேலை. அப்புறம் கண்டக்டர் வேலை.

பள்ளியில் படிக்கும் போது நாடக நடிப்பு, பிறகு சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி. ராயப்பேட்டையில் நண்பர்களுடன் தங்கி வாய்ப்பு தேடி, பாலச்சந்தர் அலுவலகத்துக்கு நடையாக நடந்து, அவர் கண்ணில் பட்டு நடிகர் ஆனார். பிற்காலத்தில் பல தத்துவ வசனங்களை பேசிய ரஜினி அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானபோது பேசிய முதல் வசனம் பைரவி வீடு இதுதானே என்பதுதான்.

பல ஸ்டைல்களை காட்டி மக்களை மகிழ்வித்த ரஜினியின் முதல் சிகரெட் ஸ்டைல் அறிமுகமான படம் மூன்று முடிச்சு. 16 வயதினிலே படத்தில் தான் ரஜினி முதன் முறையாக பன்ஞ் டயலாக் பேசினார். இது எப்படி இருக்கு என்பது அந்த டயலாக்.

ரஜினி பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் கொடூர வில்லனாக நடித்த படம் ஆடுபுலி ஆட்டம். கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாரான ரஜினி, பஸ் டிரைவராக நடித்த படம் ஆறு புஷ்பங்கள். சூப்பர் ஸ்டார் பட்டத்தை பைரவி படத்தின்போது தந்தது அந்தப் படத்தின் விநியோகஸ்தரான கலைப்புலி எஸ்.தாணு. டைட்டில் கார்டில் சூப்பர் ஸ்டார் என்று போடப்பட்டது நான் போட்ட சவால் என்ற படத்தில்தான்.

ரஜினி நடித்த முதல் திகில் படம் ஆயிரம் ஜென்மங்கள். படத்தில் அவருக்கு ஜோடி இல்லை. ஒன்பது நாட்களில் நடித்து முடித்த படம் மாங்குடி மைனர். 6 நாட்களில் நடித்த படம் அன்புள்ள ரஜினிகாந்த். அக்ரஹாரத்து இளைஞனாக பிராமண லாங்குவேஜ் பேசி நடித்த ஒரே படம் சதுரங்கம். குப்பத்து சென்னை தமிழ் பேசி நடித்த படம் தப்பு தாளங்கள் மற்றும் கொடி பறக்குது.

ஆங்கிலத்தில் வெளிவரும் கவ்பாய் ஸ்டைலில் நடித்த படங்கள் தாய்மீது சத்தியம், அன்னை ஓர் ஆலயம். சிவாஜியுடன் நடித்த முதல் படம் ஜஸ்டிஸ் கோபிநாத். அதன் பிறகு நான் வாழ வைப்பேன், விடுதலை, படிக்காதவன், படையப்பா படங்களில் நடித்தார்

மேனியாக் டிப்ரெசிங் நோயால் பாதிக்கப்பட்ட ரஜினி குணமடைந்த பிறகு நடித்த படம் தர்மயுத்தம். படத்திலும் அதே மாதிரியான நோயால் பாதிக்கப்பட்டவராகவே நடித்திருந்தார். இளைஞன், நடுத்தர வயதுகாரர், முதியவர் என்ற மூன்று பருவ கேரக்டரில் நடித்த படம் ஆறிலிருந்து அறுபது வரை.

சிறந்த நடிப்புக்காக பல விருதுகளை அவருக்கு பெற்றுத் தந்த படம். முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படமும், முதல் வெள்ளி விழா படமும் பில்லா.

முதல் சினிமாஸ்கோப் படம் பொல்லாதவன். முதல் 70 எம்எம் படம் மாவீரன். முதல் அனிமேஷன் படம் கோச்சடையான், முதல் 3டி படம் 2.0. குறைந்த பட்ஜெட்டில் தயாரான படம் குப்பத்து ராஜா (10 லட்சம்), அதிக பட்ஜெட்டில் தயாரான படம் 2.0 (550 கோடி). குறைவான நாட்கள் ஓடிய படம் மாங்குடி மைனர் (2 வாரம்), அதிக நாட்கள் ஓடிய படம் சந்திரமுகி. (890 நாட்கள்).

ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆருக்காக எழுதி வைத்திருந்த கதைதான் ராணுவ வீரன். அவர் முதல்வராகிவிட்டதால். அந்த கதையில் நடிக்க தகுதியானவர் ரஜினிதான் என்று அவரை வைத்து படம் எடுத்தார். ஆனால் எம்.ஜி.ஆருடன், ரஜினி நடித்ததில்லை.

ரஜினிக்கு தேசிய விருது எதிர்பார்க்கப்பட்ட படம் எங்கேயோ கேட்ட குரல். பண்பட்ட கிராமத்து மனிதராக நடித்திருந்தார். சகோதர நடிகைகள் அம்பிகாவும், ராதாவும் அக்கா தங்கையாகவும் ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்கள். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினி அங்கிள் என்று செல்லமாக அழைத்த குழந்தை நட்சத்திரம் மீனா. எஜமான் படத்தில் ஜோடியாக நடித்தார்.

தன்னை பேட்டி எடுக்க வந்த மாணவி உங்களுக்கு எப்படிப்பட்ட மனைவி அமைய வேண்டும் என்று கேட்க? உங்களைப்போன்று சிம்பிளாக இருந்தால் போதும் என்று ரஜினி சொல்ல, என்னை கட்டிக்குவீங்களா என்று மாணவி கேட்க, காதல் மலர... கல்யாணம் நடந்தது. அந்த மாணவி லதா ரஜினிகாந்த்.

பாண்டியன் படம் தன்னை வைத்து 27 படங்கள் இயக்கிய எஸ்.பி.முத்துராமன் குழுவிற்காகவும், அருணாச்சலம் படம் பல்வேறு காலகட்டங்களில் தனக்கு உதவிய நண்பர்களுக்காவும், அன்புள்ள ரஜினிகாந்த், வள்ளி படங்கள் தன் நண்பர் நட்ராஜுக்காகவும், குசேலன் படம் பாலச்சந்தருக்காகவும், சிவாஜி படம் ஏவிஎம் நிறுவனத்துக்காகவும், லிங்கா படம் நண்பர் ராக்லைன் வெங்கடேசுக்காகவும் ரஜினி நடித்துக் கொடுத்த படம்.

ஒரு பிரச்னையில் ரஜினிக்கு விநியோகஸ்தர்கள் சங்கம் ரெட் போட்டது. இதனால் உழைப்பாளி படம் வெளிவந்தபோது அதை வாங்க விநியோகஸ்தர்கள் முன்வரவில்லை. ரஜினி தானே சொந்தமாக வெளியிட்டார். படம் 100 நாட்கள் ஓடியது. விநியோகஸ்தர் சங்கம் பகிரங்க மன்னிப்பு கேட்டது. தயாரிப்பாளர்கள் நேரடியாக படத்தை திரையிடும் வழியையும் திறந்து வைத்தது. படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க முடியாத சோகத்தில் இரண்டு ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

முதன் முறையாக ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்ட படம் முத்து. ஜப்பானில் அவருக்கு பெரிய ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தியது. முத்துவின் ஜப்பானிய பெயர் டான்சிங் மகராஜா.

ரஜினி தயாரித்த முதல் படம் மாவீரன். ரஜினி திரைக்கதை வசனம் எழுதியது வள்ளி. பாடிய படம் மன்னன்.

எந்த அடையாளமும் இல்லாமல் ஊர்சுற்றுவது பிடிக்கும், நீண்ட தூர கார் பயணம் பிடிக்கும். கையேந்தி பவனில் சாப்பிட பிடிக்கும். பாபா தரிசனம் பிடிக்கும். ரஜினி காலில் விழுந்து வணங்கும் மூன்று பேர் அண்ணன் சத்யநாராயணராவ், இயக்குனர் கே.பாலச்சந்தர், அமிதாப் பச்சன்.

மூன்று முறை தனது சுயசரிதையை எழுத முயற்சித்து, பாதி எழுதிய நிலையில் கிழித்து போட்டு விட்டார். பொய்யாக என்னால் சுயசரிதை எழுத முடியவில்லை. உண்மையை எழுதினால் பலர் மனது புண்படும் என்று கூறிவிட்டார். ரஜினியை பற்றி இதுவரை 140 வரலாற்று புத்தங்கள் வெளிவந்துள்ளது. "அவற்றில் பாதி தான் உண்மை. என் நிஜ வரலாறு எனக்கு மட்டுமே தெரியும்" என்பார் ரஜினி.

எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, தன் வசீகர முத்தாலும், காந்த கண்களாலும், தனித்தன்மையாக அமைந்த ஸ்டைலாலும், கடுமையான உழைப்பாலும் தமிழ மக்களின் மனங்களில் இடம்பிடித்து, இன்று உலகம் முழுவதும் அன்பு உள்ளங்களை பெற்றிருக்கிற சூப்பர் ஸ்டார் கடந்த வந்த பாதை கடுமையானது. ஒரு இரவில் அவர் சூப்பர் ஸ்டார் ஆகிவிடவில்லை. அத்தனைக்கும் காரணம் அவரது உழைப்பு, நல்ல உள்ளம், பரந்த மனப்பாண்மை.

கண்டக்டர் 1.0, சூப்பர் ஸ்டார் 2.0 அரசியல் தலைவர் 3.0

தொடரட்டும் சிவாஜிராவின் பயணம்...!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in