சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
மிகப்பெரிய பட்ஜெட்டுகளில் மிக பிரமாண்டமாக எடுக்கப்படும் முன்னணி நடிகர்களின் படங்கள் எல்லாம் ரிலீஸுக்கு முந்தைய முன் வியாபாரத்திலேயே, போட்ட முதலீட்டை ஓரளவுக்கு கைப்பற்ற முயற்சித்து வருகின்றன. அந்தவகையில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள 'ஒடியன்' படம், ரிலீஸுக்கு முன்பே 100 கோடி ரூபாய் வசூலித்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
ஒரு அறிமுக இயக்குனராக மோகன்லாலை வைத்து படம் இயக்கியதோடு, ஹீரோவாக நடித்தது மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளராக மாறி இந்தப்படத்தை தயாரித்த மோகன்லாலுக்கும் ரிலீஸுக்கு முன்பே ஆசுவாசம் தந்துள்ளார் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன். ப்ரீ ரிலீஸ் எனப்படும் முன் வியாபாரத்தில் 1௦௦ கோடி வசூலித்திருப்பதில் தென்னிந்திய அளவில் மூன்றாவது இடத்தையும் இந்திய அளவில் 11வது இடத்தையும் பெற்றுள்ளதாம் 'ஒடியன்'.