'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன். அண்ணன் சிம்பு நடித்த, இது நம்ம ஆளு படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதையடுத்து படங்களுக்கு இசையமைக்காமல், ஆல்பம் உருவாக்கும் பணியில் இருந்தார்.
ஹாலிவுட் பாடகர்களை கொண்டு 5 பாடல்களை உருவாக்கிய குறளரசன், சமீபத்தில் நியூயார்க் நகரில் இதை வெளியிட்டார். தற்போது 30க்கும் மேற்பட்ட ஹிந்தி பாடல்களை ஆல்பமாக வெளியிட்டுள்ளார்.
இவற்றை கேட்ட பட நிறுவனம் ஒன்று, அவர்கள் தயாரிக்கும் புதிய படத்தில் குறளரசனை இசையமைப்பாளராக பாலிவுட்டில் அறிமுகபடுத்துகின்றனர். இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.