ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ ஆன பிறகும் எந்தவித இமேஜ் வளையத்திற்குள்ளும் சிக்காத நடிகராக இருந்து வருகிறார் விஜய் சேதுபதி. அதனால் தான் சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் அவர், வில்லனாகவும் அவ்வப்போது நடிக்கிறார். அந்த வகையில், விக்ரம் வேதாவிற்கு பிறகு ரஜினியுடன் அவர் வில்லனாக நடித்துள்ள பேட்ட படம் அவர் மீதும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில், அஜித்துடன் எப்போது நடிப்பீர்கள்? என்றொரு கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு அவர், என்னைப் பொறுத்தவரை புறம்போக்கு, இறைவி, விக்ரம் வேதா, செக்கச்சிவந்தவானம் என பல படங்களில் மற்ற நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். அஜித் படத்திலும் வாய்ப்பு கிடைத்தால் சந்தோசமாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.