மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் இசை வௌியீட்டு விழா, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாக இருந்தது. சர்காரை தொடர்ந்து பேட்ட இசையையும் புதுமையாக ரசிகர்களே வௌியிட்டனர்.
விழாவில் ரஜினி பேசியதாவது : முதலில் கஜா புயலால் உயிரிழந்த, அங்கு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவியர்களுக்கு நன்றி. மிகப்பெரிய பேரிழவு, அரசங்காத்தால் மட்டும் நிவாரணம் செய்ய முடியும் என்று நினைத்தால் தவறாகிவிடும். எல்லோரும் இணைந்து ஒன்றாக உதவ வேண்டும்.
2.0 படம் வௌிவந்து பெரிய வெற்றி பெற்றுள்ளது. அனைவருக்கும் நன்றி. இந்த பாராட்டு எல்லாம் ஷங்கர், தயாரிப்பாளர் மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவுக்கு தான் சேரும்.
பேட்ட படத்தில் ஒவ்வொரு நடிகர்கள் இணைந்தது மகிழ்ச்சி. விஜய் சேதுபதி ஒரு மகா நடிகன். ஒரு நல்ல நடிகன் உடன் இணைந்த நடித்த அனுபவம் கிடைத்தது. குழந்தைக்கு தாடி மீசை வளர்ந்தால் எப்படியிருக்கும், அந்தமாதிரி ஒரு நல்ல மனிதர் சசிகுமார். த்ரிஷா என்றும் இளமையாக உள்ளார்.
நான் ஒரு குழந்தை, என்னை வித்தியாசமான உடை, மேக்கப் எல்லாம் போட்டு என்னை ரசிக்க வைக்கிறார்கள். கார்த்திக் சுப்பராஜின் கதை திறன் வித்தியாசமாக இருக்கும். என்னை நடிக்க வைத்த கார்த்திக் சுப்பராஜ், சண்டை போட வைத்த பீட்டர் ஹெய்ன், அழகாக இளைமையாக காட்டிய ஔிப்பதிவாளர் திரு உள்ளிட்ட எல்லோருக்கும் நன்றி. அனிருத், அடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் என 3 படத்திலே தனுஷ் சொன்னார். அது நடக்கும்.
சாப்பாடு, தூக்கம், பேச்சு, அட்வைஸ் உள்ளிட்ட எந்தவொரு விஷயமாக இருந்தாலும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது. அப்படி இல்லாமல் இருந்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஒவ்வொரு பிறந்தநாளின் போது ரசிகர்களை சந்திப்பதில்லை. இந்தாண்டும் அப்படித்தான், ரசிகர்கள் யாரும் தவறாக எண்ண வேண்டாம்.
இவ்வாறு ரஜினி பேசினார்.