ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் சேனலில் ஒளிபரப்பாகி வரும் காபி வித் கரன் சீசன்-6 என்ற நிகழ்ச்சியை பாலிவுட் பட தயாரிப்பாளர் கரன்ஜோஹர் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை வடஇந்திய பிரபலங்களையே இந்த நிகழ்ச்சியில் இணைத்து வந்த அவர், முதன்முறையாக தென்னிந்தியாவில் இருந்து பாகு பலி படத்தின் டைரக்டர் ராஜமவுலி, நடிகர்கள் பிரபாஸ், ராணா ஆகியோரை வைத்து ஒரு எபிசோடு படமாக்கியிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியின், படப்பிடிப்பு டிசம்பர் 8-ந்தேதி மும்பையில் நடந்த நிலையில், அடுத்த வாரம் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் பாகுபலி படப்பிடிப்பின்போது நடைபெற்ற சுவராஸ்ய நிகழ்வுகள் தொடங்கி அவர்கள் மூவரின் எதிர்கால சினிமா குறித்தும் சுவையான விவாதம் நடத்தியுள்ளார் கரன்ஜோஹர். இந்த கரன்ஜோஹர்தான் பாகுபலி படத்தின் ஹிந்தி பதிப்பை வெளியிட்டார்.