அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் பாசில். தனது மகன் பஹத் பாசில் சினிமாவுக்கு நடிக்கவந்தபின் பல வருடமாக சினிமாவை விட்டு ஒதுங்கி ஓய்வெடுத்து வருகிறார் பாசில். இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் நடிகர் பிருத்விராஜ் தான் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாகும் லூசிஃபர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பாசிலை ஒப்பந்தம் செய்தார்.,
இந்தப்படத்தில் நாயகன் மோகன்லாலுக்கு காட்பாதர் போன்ற கேரக்டரில் ஒரு துறவியாக நடிக்கிறாராம் பாசில். இவர் நடிகராகி விட்டதை அறிந்து பாசிலை தேடி பல இயக்குனர்கள் படையெடுத்து வருகிறார்கள். அதில் இயக்குனர் பிரியதர்ஷன் முந்திக்கொண்டு மோகன்லாலை வைத்து தான் இயக்கிவரும் அரபிக்கடலிண்டே சிம்ஹம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பாசிலை ஒப்பந்தம் செய்துள்ளார்.