பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
மலையாள திரையுலகில் கதையின் நாயகியாக, குணசித்திர நடிகையாக வலம்வருபவர் நடிகை அனுமோல். இவர் மலையாளி என்றாலும் அறிமுகமானது தமிழில் தான். தமிழில் திலகர் மற்றும் ஒருநாள் இரவில் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தநிலையில் இவர் புதிதாக அனு யாத்ரா என்கிற யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
இதுவரை தான் பயணித்துவந்த புதுப்புது இடங்கள் குறித்த வீடியோக்களையும் தகவல்களையும் அந்த சேனலில் பதிவேற்ற உள்ளார். இந்த சேனலை நடிகர் துல்கர் சல்மான் துவக்கி வைத்துள்ளார். அனுமோல் பயணித்து வந்த விதவிதமான லொக்கேசன்களை பார்த்த துல்கர் சல்மான் அசந்துபோனாராம்.
இதுவரை தான் பார்த்திராத பல இடங்களுக்கு அனுமோல் சென்று வந்துள்ளதை கண்ட துல்கர் சல்மான், ஒரு யாத்ரீகனாக அனுமோல் மீது பொறாமையாக இருக்கிறது என்றும் தானும் இதுபோன்ற சேனல் ஒன்றை ஆரம்பிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.