சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா |
மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் 2019ம் வருடம் ஏப்ரல் 26ம் தேதி வெளியாக உள்ள 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' படத்தின் டிரைலர் நேற்று மாலை யு டியூபில் வெளியிடப்பட்டது. வெளியான 24 மணி நேரங்களில் 4 கோடி பார்வைகளையும், 20 லட்சம் லைக்குகளையும் பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன் 24 மணி நேரத்தில், 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' படத்தின் டிரைலர் 2 கோடியே 30 லட்சம் பார்வைகளைப் பெற்றதுதான் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' முறியடித்துள்ளது. தற்போது இந்த டிரைலர் 4 கோடியே 8 லட்சம் பார்வைகளையும் 24 லட்சம் லைக்குகளையும் பெற்றிருக்கிறது.
யு டியூபில் முதலிடத்தில் உள்ள டிரைலராக 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' தான் உள்ளது. அந்த டிரைலருக்கு 21 கோடியே 56 லட்சம் பார்வைகளும், 34 லட்சம் லைக்குகளும் இதுவரை கிடைத்துள்ளன. அந்த சாதனையை 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' டிரைலர் தமிழிலும் யு டியுபில் வெளியிடப்பட்டுள்ளது.