பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த சித்து பிளஸ் 2 என்ற படத்தில் சாந்தனு ஜோடியாக அறிமுகமானார் சாந்தினி. அதன் பிறகு வில் அம்பு, கட்டப்பாவ காணோம், ராஜா ரங்குஸ்கி, மன்னர் வகையறா, வண்டி உள்பட சுமார் 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சிறு பட்ஜெட் படங்கள், அறிமுக நடிகரின் படங்களுக்கு ஆஸ்தான ஹீரோயினாக இருந்தார். வணங்காமுடி. அச்சமில்லை அச்சமில்லை, டாலர் தேசம் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். சாந்தினி நடன இயக்குனர் நந்தாவை காதலித்து வந்தார்.தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.
இவர்கள் திருமணம் வருகிற 12ந் தேதி திருப்பதியில் நடக்கிறது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள். அதன் பிறகு வருகிற 16ந் தேதி சென்னை மேயர் ராமநாதன் மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திரையுலகினர் கலந்து கொள்கிறார்கள். "நந்தாவும் நானும் கடந்த 9 வருடமாக காதலித்து வருகிறோம். சினிமாவில் நல்ல நிலையில் இருக்கும்போதே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். திருமணத்து பிறகும் இருவரும் சினிமாவில் தொடர்ந்து பணியாற்றுவோம்" என்கிறார் சாந்தினி.