தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முருகதாஸ் இயக்கத்தில் ஏஆர்.ரஹ்மான் இசையமைப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலரது நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த படம் 'சர்கார்'. இப்படத்தின் பாடல்கள் வழக்கம் போலவே சூப்பர் ஹிட்டாகிவிட்டன. ரஹ்மான், விஜய், விவேக் கூட்டணியின் முந்தைய படமான 'மெர்சல்' பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. அதைவிட கூடுதலான சாதனையை 'சர்கார்' பாடல்கள் யூ டியுபில் படைத்து வருகின்றன.
இப்படத்தில் இடம் பெற்ற 'சிம்டாங்காரன்' பாடலின் லிரிக் வீடியோ இரண்டு மாதங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது. அந்தப் பாடல் 3.5 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. அதன்பின் வெளியான 'ஒரு விரல் புரட்சி' பாடலின் லிரிக் வீடியோ 1 கோடி 10 லட்சம் பார்வைகளும், பின்னர் வெளியான, 'சிஇஓ இன் த அவுஸ்' 1 கோடி 10 லட்சம், 'ஓஎம்ஜி பொன்னு' 1 கோடி 90 லட்சம், 'டாப் டக்கர்' பாடல் 2 கோடியே 20 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளன. படத்தில் இடம் பெற்றுள்ள ஐந்து பாடல்களின் லிரிக் வீடியோக்கள் 1 கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளன.
இருப்பினும் 'மெர்சல்' படத்தின் 'ஆளப் போறான் தமிழன்' பாடல் வீடியோ 8 கோடியே 50 லட்சம் பார்வைகளைக் கடந்து யு டியூபில் உள்ள தமிழ் சினிமா பாடல்களில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.