ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய்சேதுபதி நடிப்பில் வரும் டிச-2௦ஆம் தேதி வெளியாகவுள்ள படம் 'சீதக்காதி'. இது விஜய்சேதுபதியின் 25வது படமும் கூட. இதில் விஜய்சேதுபதி என்பது வயது கிழவராக நடித்துள்ளார் என்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
இந்தப்படத்தின் கதையை 2௦13லேயே தயார்செய்துவிட்ட இயக்குனர் பாலாஜி தரணீதரன், அப்போது தனது நண்பரான, ஆனால் முன்னணி நடிகராக வளர்ந்திராத விஜய்சேதுபதியிடம் கூறிவிட்டு, இதில் அமிதாப் பச்சனைத்தான் ஹீரோவாக நடிக்க வைக்க முயற்சிக்கப்போகிறேன் என கூறினாராம்.
ஆனால் இந்த ஐந்து ஆண்டில் விஜய் சேதுபதியின் அபார வளர்ச்சி, நடிப்புத்திறமை எல்லாமாக சேர்ந்து அவரையே சீதக்காதியாக நடிக்கும் அளவுக்கு கொண்டுவந்துவிட்டது. அதுமட்டுமல்ல 96, சீதக்காதி ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் ஒப்புக்கொண்ட விஜய்சேதுபதி, சீதக்காதி தான் தனது 25வது படமாக வர வேண்டும் என அப்போதே உறுதியாக சொல்லிவிட்டாராம்.