ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |
ராஜீவ்மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் சர்வம் தாள மயம். அபர்ணா முரளி நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை. இசையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்திற்காக ஓராண்டு மிருதங்கம் வாசிக்க பயிற்சி எடுத்து நடித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
இந்தப்படத்தின் முதல் சிங்கிள் டிராக், ஏற்கனவே வெளியான நிலையில், மாயா மாயா மன்மோகனா என்ற இரண்டாவது சிங்கிள் பாடலை நடிகை ஐஸ்வர்யாராய் இணையதளத்தில் வெளியிட்டார். அதோடு, இந்த பாடலை வெளியிடுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அனைவரும் இந்த பாடலை கேட்டு மகிழுங்கள். சர்வம் தாளமயம் படத்திற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
ராஜீவ்மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் ஐஸ்வர்யா ராய், நாயகியாக நடித்திருந்தார். அந்தப்படத்திற்கு ரஹ்மான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.