பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படமான 2.0, உலகளவிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. என்றும் இல்லாத வண்ணம் கத்தார் தியேட்டர்களில் நவம்பர் 29ம் தேதி, சென்ற வியாழன் அன்று களை கட்டி இருந்தது.
ரஜினி, அக்ஷய் குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமான 2.0 திரைப்படம், கத்தாரின் பல தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. ஒரே நாளில் அங்கு 140 காட்சிகள் திரையிடப்பட்டு, இதுவரை இல்லாத சாதனையை நிகழ்த்தியுள்ளது.
கத்தார் ரஜினி மக்கள் மன்றம், நான்கு சிறப்பு ரசிகர் காட்சிகளை வெவ்வேறு காட்சியகங்களில் ஏற்பாடு செய்திருந்தனர். ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களாலும் ரசிகர் காட்சி பெரும் கொண்டாட்டத்தோடு கண்டு ரசிக்கப்பட்டது.
காலையில் 7 மணி சிறப்பு காட்சி நோவா சூக்வாக்கிப் - கத்தார் தியேட்டரில் துவங்குவதற்கு முன்பாக 2.0 அலங்கரிக்கப்பட்ட கேக் வெட்டப்பட்டது. வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு (சாக்லேட்) வழங்கினர், கத்தார் ரஜினி மக்கள் மன்றத்தினர். அவ்வாறே மாலை ஏசியன் டவுண்-கத்தார் தியேட்டரிலும் ரசிகர் காட்சி, பொதுமக்கள் சூழமன்றத்தினரால் கோலாகலமாக கொண்டாடி மகிழப்பட்டது.
கடந்த முறை ரஜினி நடித்த காலா திரைப்படத்தின் போது ஒரு சிறப்பு காட்சி மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தமுறை, பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, 2.0 வெளியீட்டின் போது நான்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு, ரஜினி மக்கள் மன்றத்தினரால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
ஜூன் மாதம் தோற்றுவிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் தலைமை மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட கத்தார் ரஜினி மக்கள் மன்றம் பல் வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறது. இது குறித்து கத்தார் ரஜினி மக்கள் மன்றம் தயாரித்து வெளியிட்ட காணொளி படம், 2.0 சிறப்பு ரசிகர் காட்சிகளின் போது திரையிடப்பட்டு, பார்வையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.