விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
நெல் ஜெயராமன் இறப்பிற்கு இயக்குனர் தங்கர் பச்சான் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், 'எல்லாவற்றையும் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர் விட்டுச்சென்ற பணியைச் செய்ய யார் இருக்கிறார்கள்?
மரபு மாற்று பயிர்களுக்கு எதிராக போராடியவர். அடுத்த தலைமுறைகளுக்காகவே வாழ்ந்தவர். நெல் ஜெயராமன் விட்டு சென்ற பணியை அரசு தொடர வேண்டும். எதை எதையோ பள்ளிப் பாடங்களில் கற்றுத் தருபவர்கள் விவசாயம் குறித்து கட்டாயம் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.
தமிழக முதல்வர், வேளாண்மை அமைச்சர், பள்ளிக்கல்வி அமைச்சர் அனைவருமே உழவு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். எனவே அவர் விட்டுச்சென்ற பணியைத் தொடர கடமை இருக்கிறது. நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு பாடமாக்க வேண்டும். அது தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
இவ்வாறு கூறியுள்ளார்.