விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |
கேரளாவில் மிக அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் ரஜினி நடித்த 2.O படம் வெளியானது. ஆனாலும் முதல் இரண்டு நாட்கள், குறிப்பாக வெள்ளிக்கிழமை வரை வசூல் நிலைமை குறைவாகவே இருந்தது. ஆனால் சனி, ஞாயிறு இரண்டு நாட்களிலும் குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வர ஆரம்பித்தததால் படம் ஹவுஸ்புல்லாக போக ஆரம்பித்தது. திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களிலும் நல்ல வசூலையே தக்கவைத்துள்ளது.
அந்தவகையில் கடந்த 6 நாட்களில் சுமார் 15.85 கோடி ரூபாய் வசூலித்து மலையாள சினிமாவில் அதிக அளவில் வசூலித்த தமிழ்ப்படம் என்கிற சாதனையை விஜய்யின் சர்கார் படத்திடம் இருந்து தட்டிச்சென்றுள்ளது . சர்க்கார் கேரளாவில் வசூலித்த நிகர தொகை 14.71 கோடி ரூபாய். இதே ரீதியில் போனால் இந்த வாரத்திற்குள் 2.O சுமார் 20 கோடி வசூல் என்கிற இலக்கை எட்டிவிடும் என்கிறார்கள் திரைப்பட வர்த்தகர்கள்.