தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 2018ம் ஆண்டிற்கான 100 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ரஹ்மான், ரஜினி, விஜய், சூர்யா, விஜய் சேதுபதி, நயன்தாரா போன்ற திரைப்பிரபலங்கள் இடம் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து 3வது முறையாக இடம் பிடித்து உள்ளார். இவரது வருமானம் ரூ.252.25 கோடி. கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி 2வது இடம் பிடித்துள்ளார். இவரது வருமானம் ரூ.228.09 கோடி. அக்ஷய் குமார் ரூ.185 கோடி வருமானத்துடன் 3வது இடத்தில் உள்ளார்.
ரூ.112.8 கோடி வருமானத்துடன் தீபிகா படுகோனே 4வது இடத்திலும், தோனி ரூ.101.77 கோடி வருமானத்துடன் 5 வது இடத்திலும் உள்ளார்.
போர்ப்ஸ் வெளியிட்டுள்ள 100 பேர் பட்டியலில், முதல் இருபது இடங்களில் ரஹ்மானும், ரஜினிகாந்த்தும் இடம் பெற்றுள்ளனர். ரஹ்மான் ரூ.66.75 கோடி வருமானத்துடன் 11வது இடத்திலும், ரஜினி, ரூ.50 கோடி வருமானத்துடன் 14வது இடத்திலும் உள்ளனர்.
ரூ.30.33 கோடி வருமானத்துடன் விஜய் 26வது இடத்திலும், ரூ.26 கோடி வருமானத்துடன் விக்ரம் 29வது இடத்திலும், ரூ.23.67 கோடி வருமானத்துடன் சூர்யா, விஜய் சேதுபதி இருவரும் 34வது இடத்திலும், ரூ.17.25 கோடி வருமானத்துடன் தனுஷ் 53வது இடத்திலும், ரூ.15.48 கோடி வருமானத்துடன் டாப்சி 67வது இடத்திலும், ரூ.15.17 கோடி வருமானத்துடன் நயன்தாரா 69வது இடத்திலும், ரூ.14.2 கோடி வருமானத்துடன் கமல்ஹாசன் 71வது இடத்திலும் உள்ளனர்.