இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை சினிமாவாக உருவாகிறது. இயக்குநர்கள் பிரியதர்ஷினி, பாரதிராஜா, விஜய் மற்றும் லிங்குசாமி ஆகியோர் இவரின் வாழ்கையை படமாக்க போட்டி போட்டு வருகின்றனர்.
இவர்களில் பிரியதர்ஷினி இயக்கும் பட வேலைகள் துவங்கிவிட்டன. தி அயர்ன் லேடி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கிறார். ஜெயலலிதா சம்பந்தப்பட்ட வீடியோக்களை பார்த்தும், அவரைப் பற்றிய செய்திகளை கேட்டும், தன்னை தயார்படுத்தி வருகிறார் நித்யா. தமிழ், தெலுங்கு, கன்னடன் மற்றும் ஹிந்தி என 4 மொழிகளில் இப்படத்தை இயக்குகிறார் பிரியதர்ஷினி.
இந்நிலையில், ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவுதினமான இன்று(டிச., 5) இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் இருப்பது ஜெயலலிதாவா அல்லது நித்யா மேனனா என தெரியாத அளவிற்கு அப்படியே ஜெயலலிதா போன்று பிரதிபலிக்கிறார் நித்யா மேனன். தற்போது இந்த போஸ்டர் வைரலாகி உள்ளது.