Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : சினிமாவும், ஜெயலலிதாவும்...!

05 டிச, 2018 - 10:29 IST
எழுத்தின் அளவு:
Jayalalitha-and-her-Cinema-carrier

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று. அவரது திரைப் பயணம் பற்றிய சின்ன பிளாஷ் பேக்...

வெண்ணிற ஆடை தான் ஜெயலலிதாவின் முதல் படம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எபிச்ட்லே என்ற ஆங்கிலப் படம் தான் ஜெயலலிதா நடிப்பில் வெளியான முதல் படம்.


1965ம் ஆண்டு வெளியான வெண்ணிற ஆடை தான் தமிழில் ஜெயலிதாவின் முதல் படம். தொடர்ந்து, அதே ஆண்டில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஜெயலலிதாவை கமர்ஷியல் ஹீரோயின் ஆக்கியது. ஆயிரத்தில் ஒருவன் தான், எம்.ஜி.ஆர் - ஜெயலிதா நடிப்பில் வெளியான முதல் படம் .


தமிழ் சினிமாவின் சிறந்த ஜோடிகள் என்று புகழ்பெற்ற இந்த ஜோடி, ஆயிரத்தில் ஒருவன், தேர் திருவிழா, காவல்காரன், குடியிருந்த கோயில், நம் நாடு, தேடி வந்த மாப்பிள்ளை, சந்திரோதயம், அடிமைப்பெண், ராமன் தேடிய சீதை, காதல் வாகனம், ரகசிய போலீஸ் 115, மாட்டுக்கார வேலன், குமரி கோட்டம், கன்னி தாய், என் அண்ணன், எங்கள் தங்கம், ஒரு தாய் மக்கள், ஒளி விளக்கு, கணவன், நீரும் நெருப்பும், பட்டிக்காட்டு பொன்னையா, கண்ணன் என் காதலன், அன்னமிட்ட கை, புதிய பூமி மற்றும் அரச கட்டளை என்று மொத்தம் 26 படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர்.


ஜெயலலிதா சிறந்த நடிகை மட்டுமின்றி சிறந்த பாடகியாகவும் வலம் வந்தவர். அடிமைப் பெண் படத்தில் இடம்பெற்ற அம்மா என்றால் அன்பு உள்பட 10க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். ஜெயலலிதா சிறந்த பாடகியாக வரவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் ஆசையாக இருந்தது. நல்ல குரல் வளம் இருந்தும் ஏனோ ஜெயலலிதா பாடகியாக ஆர்வம் காட்டவில்லை.


நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற படம் தான் ஜெயலிலதா நடிப்பில் வெளியான கடைசி படம். இப்படத்தில் தமிழ்நாட்டின் முதல்வராக சிறப்புத் தோற்றத்தில் ஜெயலலிதா நடித்திருந்தார்.

ரஜினி நடித்த பில்லா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை மறுத்து விட்டார் ஜெயலலிதா. அதன் பிறகுதான் அந்த கேரக்டரில் ஸ்ரீப்ரியா நடித்தார்.


ரஜினி நடித்த ரங்கா படத்தில் அவரின் அக்கா கேரக்டரில் நடிக்க ஜெயலலிதா சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால், அவரை அரசியலுக்கு கொண்டு வர முடிவு செய்திருந்த எம்.ஜி.ஆர் படத்தின் தயாரிப்பாளரிடம் பேசி ஜெயலலிதாவுக்கு பதிலாக கே.ஆர்.விஜயாவை அந்த கேரக்டரில் நடிக்க வைத்தார்.


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் சுமார் 140 க்கும் அதிகமான படங்களில் ஜெயலலிதா நடித்திருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in