வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகவுள்ள படம் - தளபதி 63. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட் செய்கிறார். கலை இயக்குநராக முத்துராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக சென்னையில் அரங்குகள் அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளார் கலை இயக்குநர் முத்துராஜ்.
அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, விவேக், யோகிபாபு நடிப்பது மட்டுமே இப்போதைக்கு முடிவாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன் படப்பிடிப்பு ஜனவரி இறுதியில் தொடங்க உள்ளது. கதைப்படி விஜய், பயிற்சியாளராக நடிக்கிறார்.
எனவே, இன்னும் பிட்டாக விஜய் இருக்க வேண்டும் என அட்லீ முடிவு செய்திருக்கிறார். இதற்காக, சிறப்பு பயிற்சியாளர், ஒருவரை வைத்து விஜய்யின் உடலமைப்பை மாற்ற முடிவு செய்துள்ளார். விஜய்யும் அவர் மூலம் தன்னுடைய உடலமைப்பை மாற்றி வருகிறார். விஜய்க்கு பயிற்சி கொடுப்பவர் பல ஆண்டுகளாக சூர்யாவுக்கு பயிற்சி தருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.