பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'தயாரிப்பாளர் சங்கப் பணிகளை முழுமையாக கவனிக்க முடியாத நடிகர் விஷால், சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும்' என, தயாரிப்பாளர் டி.சிவா கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
தயாரிப்பாளர் சங்கத்தில் நிறைய நிர்வாக சீர்கேடு உள்ளது. இதற்காக பொதுவாக எல்லோரையும் இணைத்து தவறு சொல்ல முடியாது. தலைவராக இருக்கும் விஷாலையும், முழுமையாக பொறுப்பாக்க முடியாது. விஷாலைப் பொறுத்த வரையில், தயாரிப்பாளர் சங்கத்தை கெடுக்கும் எண்ணம் அவருக்கு எதுவும் இல்லை.
அவருக்கு இருக்கும் தொடர்ச்சியான வேலைகளுக்கு மத்தியில், அவரால், தயாரிப்பாளர் சங்கப் பணிகளை கவனிக்க முடியவில்லை. அவர் நடிகர் சங்கத்திலும் பொறுப்பாளராக இருந்து கொண்டு, தயாரிப்பாளர் சங்கத்திலும் பொறுப்பில் இருக்கும்போது, இரண்டையும் சமமாக பாவித்து, அவரால், இரு நிர்வாகத்தையும் சிறப்பாக கொண்டு செல்ல முடியவில்லை.
இதனால், தயாரிப்பாளர் சங்கம் ரொம்பவும் பாதிக்கப்படுகிறது. அதனால், விஷால், தயாரிப்பாளர் சங்கத்தின் நன்மைக்காக, தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவைக் கூட்டி, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.