ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விமல், ஆஸ்னா ஜவேரி நடித்துள்ள படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு. இது தெலுங்கில் வெளியான குண்டூர் டாக்கீஸ் என்ற படத்தின் ரீமேக். இந்தப் படத்தில் இன்னொரு நாயகியாக மியா ராய் லியோன் என்பவர் நடிக்கிறார். இவர் படத்தில் ரிவால்வார் ரீட்டா என்ற கேரக்டரில் நடிக்கிறார். படம் முழுக்க தண்ணி, தம்மு என்று இருக்கிறாராம். அத்துடன் விமலுடன் படுக்கை அறை காட்சியில் துணிச்சலுடன் நடித்திருக்கிறார். இவர் பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோனின் உறவு முறை சகோதரி என்ற படக்கு குழு தெரிவித்துள்ளது.
இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தை ஏ.ஆர்.முகேஷ் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். சர்மிளா மண்ட்ரோ தயாரித்துள்ளார். ஆனந்தராஜ், சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், நடராஜன் சங்கரன் இசை அமைத்துள்ளார். படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வாங்கி உள்ளது. வருகிற 7ந் தேதி வெளிவருகிறது.