ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
பேட்ட படத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்தப்படியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தையும் லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கதை தொடர்பான பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன. ஜனவரி அல்லது அதற்கடுத்த மாதங்களில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.
இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள், டெக்னீசியன்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி, ஸ்பைடர் படங்களுக்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
1991ல் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த தளபதி படத்திற்கும் சந்தோஷ் சிவன் தான் ஒளிப்பதிவு செய்திருந்தார். நீண்ட இடைவேளைக்குப்பிறகு இப்போது ரஜினி உடன் இணைய உள்ளார்.