ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
2.0 படத்தை அடுத்து, கமலை வைத்து இந்தியன்-2 படத்தை இயக்க தயாராகி வருகிறார் ஷங்கர். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், பிரீ புரொடக்சன்ஸ் பணிகள் துவங்கி உள்ளன.
முக்கியமாக, இந்த படத்தில் மீண்டும் இந்தியன் தாத்தாவாக நடிக்கும் கமலுக்கு பதிய பாடிலாங்குவேஜ், ஹேர்ஸ்டைலை மாற்றி சமீபத்தில் அதற்கான சோதனை ஓட்டத்தை நடத்தினார் ஷங்கர். அந்த வகையில், இந்தியன் படத்தில் நடித்ததில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு வேடத்தில் இந்தியன்-2வில் நடிக்கிறார் கமல்.
நாயகியாக காஜல் அகர்வால் நடிப்பதாக கூறப்படும் நிலையில், அவரை பாரீஸ் நகருக்கு வரவைத்து மேக்கப் டெஸ்ட் நடத்தியிருக்கிறாராம் ஷங்கர். அந்த டெஸ்ட் 2 தினங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.