'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
விஜய்சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளியாகி அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட படம் 96. இந்தப்படத்தில் சிறுவயது த்ரிஷா கேரக்டரில் நடித்தவர் கௌரி கிருஷ்ணன். ரசிகர்கள் அனைவரும் இவரது அற்புதமான நடிப்பில் மயங்கிப்போனது என்னவோ மறுக்க முடியாத உண்மை.
இந்தநிலையில் மலையாளத்தில் துல்கரின் நண்பரான சன்னி வெய்ன் நடிக்கும் அனுக்ரகீதன் ஆண்டனி என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கௌரி கிருஷ்ணன். பிரின்ஸ் ஜாய் என்பவர் இந்தப்படத்தை இயக்கவுள்ளார். கேரளா மாநிலம் வைக்கம் பகுதியை சேர்ந்த கௌரி கிருஷ்ணன், பெங்களூரில் தனது கல்லூரி படிப்பை முடித்தவர்.