ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
16வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வருகிற 13ந் தேதி தொடங்குகிறது. 20ந் தேதி வரை 8 நாட்கள் இந்த விழா நடக்கிறது. சென்னை தேவி, அண்ணா, கேசினோ, சத்யம் தியேட்டர்களிலும், தாகூர் திரைப்பட மையம், ரஷ்யன் கலாச்சார மையம் ஆகியவற்றில் நடக்கிறது. 59 நாடுகளைச் சேர்ந்த 150 படங்கள் திரையிடப்படுகிறது.
இதன் தொடக்க விழா 13ந் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கிறது. நிறைவு விழா 20ந் தேதி கலைவாணர் அரங்கிலேயே நடக்கிறது. இதில் இந்திய திரையுலக பிரமுகர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். முதல் படமாக கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற ஷாப் லிப்டர்ஸ் என்கிற ஜப்பானிய படம் திரையிடப்படுகிறது. தமிழில் வெளிவந்த மேற்கு தொடர்ச்சி மலை, இந்தியில் வெளிவந்த லடாக் படங்கள் சிறப்பு திரைப்படமாக திரையிடப்படுகிறது. முதன் முறையாக ஸாம்பியா, கென்யா, லத்தீன் அமெரிக்க படங்கள் திரையிடப்படுகிறது.