டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
2.0 படத்தில் அக்ஷய்குமார் ஏற்று நடித்த பக்ஷிராஜன் கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த வேடத்தில் நடிக்க இயக்குநர் ஷங்கர் முதலில் அணகியது கமல்ஹாசனைத் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை 2.0 படத்தின் வசனகர்த்தாவான எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பக்கத்தில் உறுதிபடுத்தியதோடு விளக்கியும் உள்ளார். அந்தக் கதாபாத்திரம் முதலில் கமல்ஹாசனுக்காக உத்தேசிக்கப்பட்டது, அவருக்காகவே எழுதப்பட்டது. ஆகவேதான் மரபு சார்ந்த பலவிஷயங்கள் அவருக்காகச் சேர்க்கப்பட்டன." என்று ஜெயமோகன் பதிவிட்டுள்ளார்.
2.0 படத்தின் கதையைக் கேட்ட கமல், பக்ஷிராஜன் வேடத்தில் நடிக்க முதலில் தயங்கி பிறகு நடிக்க உடன்பட்டதாக தகவல் அடிபடுகிறது. சம்பள விஷயம் மற்றும் அப்போதைய படங்களின் கால்ஷீட் சூழல் போன்ற காரணங்கள் ஒத்துவராததால், அதன் பிறகே கமலுக்கு பதில் அக்ஷய்குமாரை கமிட் பண்ணியதாக தகவல்.