பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் சண்டை பயிற்சியாளர்களில் ஒருவரான பீட்டர் ஹெய்னுக்கு விரைவில் இயக்குனராகும் ஆசையும் இருக்கிறது என்பதை சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் மோகன்லால் படத்தை இயக்க விரும்புகிறேன் என கூறியிருப்பதன் மூலம் தனது முதல் பட ஹீரோவாக மோகன்லால் தான் நடிப்பர் என்பதை சூசகமாகவும் குறிப்பிட்டுள்ளார்.
'புலி முருகன்' படத்திற்காக முதன்முறையாக மோகன்லாலுடன் இணைந்து அவருக்கான சண்டைக்காட்சிகளை வடிவமைத்த பீட்டர் ஹெய்ன், இத்தனை வயதிலும் அவரது உடல் சண்டைக்காட்சிகளில் வில்லாய் வளைவது கண்டு பிரமித்து போனாராம்.
அதை தொடர்ந்து தற்போது ஒடியன் படத்திலும் மோகன்லாலின் சண்டைக்காட்சிகளை பிரமிக்கும்படி வடிவமைத்துள்ளாராம். இந்த இரண்டு படங்களில் மோகன்லாலுடன் இணைந்து பணியாற்றி அனுபவத்தில், நட்பில் மோகன்லாலை வைத்து ஆக்சன் படம் ஒன்றை இயக்க வேண்டும் என உறுதியாக முடிவுசெய்துவிட்டாராம் பீட்டர் ஹெய்ன்.