ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பேரன்பு'. ராம் இயக்கியுள்ள இந்தப்படத்தில் அமுதவன் என்கிற டாக்சி டிரைவராக நடித்துள்ளார் மம்முட்டி. இந்தப்படம் தொடர்ந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
இயக்குனர் ராம் கூட, மம்முட்டி இல்லையென்றால் இந்தப்படத்தையே நான் எடுத்திருக்க மாட்டேன் என கூறும் அளவுக்கு அனைவராலும் மம்முட்டியின் நடிப்பு பேசப்பட்டு வருகிறது. இந்த தகவல்கள் அவ்வப்போது மோகன்லாலின் காதுகளுக்கும் சென்று படம் பார்க்கும் ஆவலை கிளப்ப, கட்டாயம் இந்தப்படத்தை தியேட்டருக்கு சென்றுதான் பார்ப்பேன், அதுவும் முதல் நாளே என கூறியுள்ளார் மோகன்லால்.