பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'வீரம்' படத்தில் இணைந்த இயக்குனர் சிவா, அஜித் கூட்டணி அடுத்து 'வேதாளம், விவேகம்' ஆகிய படங்களிலும் இணைந்தது. இதில் 'வேதாளம்' படம் சூப்பர் ஹிட்டானது. 'விவேகம்' படம் பிளாப் ஆனது. மீண்டும் இந்தக் கூட்டணி 'விஸ்வாசம்' படத்தில் இணைந்தது அஜித் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. சிவாவை விட்டால் வேறு இயக்குனர் இல்லையா என்றெல்லாம் கமெண்ட் அடிக்க ஆரம்பித்தார்கள்.
இருப்பினும் அஜித் மீதுள்ள பாசத்தில் 'விஸ்வாசம்' மோஷன் போஸ்டரையும் சாதனைப் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள். அடுத்து பாடல்கள், டிரைலர் ஆகியவற்றிற்காகக் காத்திருக்கிறார்கள்.
'விஸ்வாசம்' படம் வெற்றி பெற்றால் மீண்டும் சிவா, அஜித் கூட்டணி இணைய வாய்ப்புள்ளது. ஆனால், தன்னுடைய அடுத்த படம் அஜித்துடன் இல்லை என சிவா தெரிவித்துள்ளார். வேறு ஒரு நாயகருடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.