'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மம்முட்டி, மோகன்லால் அளவுக்கு இனி ஹீரோவாக மட்டுமே நடிக்க முடியாது என்பதை நடிகர் ஜெயராம் நன்றாகவே உணர்ந்துள்ளார். அதனால் தான், கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான 'பஞ்சவர்ண தத்த' என்கிற படத்தில் தொந்தியும் மொட்டைத்தலையுமான ஒரு கெட்டப்பில் நடித்திருந்தார்.
அதேப்போல அடுத்ததாக 'கிராண்ட் பாதர்' என்கிற படத்தில் வயதான கேரக்டரில் நடிக்க இருக்கிறார் ஜெயராம். இந்தப்படத்தின் துவக்கவிழா வரும் டிச-3ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்தப்படத்தை ஒன்றாக வந்து துவங்கி வைக்கும்படி மம்முட்டி, மோகன்லால் இருவருக்கும் அழைப்பு விடுத்து அவர்கள் சம்மதத்தையும் வாங்கிவிட்டார் ஜெயராம்.