வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஹிந்தி மற்றும் தமிழ் திரையுலகங்களில் உள்ள சில இயக்குனர்களும் நட்சத்திரங்களும் கொஞ்சம் கொஞ்சமாக வெப் சீரிஸுக்கு மாற ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் மலையாள திரையுலகினர் வெப் சீரிஸ் என்றாலே சற்று ஒதுங்கியே இருந்தனர். இந்தநிலையில் மலையாள இயக்குனர் மிருதுள் நாயர் முதன்முதலாக வெப் சீரிஸ் கலாசாரத்தை மலையாளத்தில் ஆரம்பித்து வைத்திருக்கிறார்.
இந்தாண்டு நடிகர் ஆசிப் அலியை வைத்து 'பி டேக்' என்கிற படத்தை இயக்கிய மிருதுள் நாயர், தான் இயக்கவுள்ள இந்த வெப் சீரிஸுக்கு 'இன்ஸ்டாகிராமம் என டைட்டில் வைத்துள்ளார். மலையாள திரையுலகில் இருந்து வெளியாகும் இந்த முதல் வெப் சீரிஸின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மம்முட்டி வெளியிட்டுள்ளார்.