ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள பிரம்மாண்டப் படமான '2.0' படம் நாளை(நவ., 29) உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
சென்னையைத் தவிர வெளியூர்களில் பல தியேட்டர்களில் இப்படத்தின் ரசிகர் மன்றக் காட்சிகள், அதிகாலை 4 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற உள்ளன. ஒரு பண்டிகை நாளில் படம் வெளிவரவில்லை என்றாலும் முதல் நாள் முன்பதிவு அமோகமாகவே உள்ளது. ஆனால் மற்ற நாட்களில் மந்தமாக உள்ளது.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் அதிகாலை ரசிகர் மன்றக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டனவாம்.
2.0 படத்தை, தன் முதல் படம் போல நினைப்பதாகச் சொன்ன ரஜினிகாந்த், நாளை சென்னை, குரோம்பேட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் இயக்குனர் ஷங்கருடன் சேர்ந்து பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்களுடன் படம் பார்க்க உள்ளார் ரஜினிகாந்த். அவர் ரஜினியாகவே தியேட்டருக்குச் செல்வாரா அல்லது மாறுவேடத்தில் செல்வாரா ?.