பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் மோஷன் போஸ்டர், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், வியாழக்கிழமை சென்டிமென்ட்டும் இல்லாமல் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென யு டியுபில் வெளியிடப்பட்டது.
இருப்பினும் அஜித் ரசிகர்கள் அந்த மோஷன் போஸ்டரைக் கொண்டாட ஆரம்பித்தனர். வெளியான இரண்டு நாட்களில் யு டியூபில் அதைத் திரும்பத் திரும்பப் பார்த்து புதிய சாதனை படைக்க காரணமாகிவிட்டனர்.
இதுவரை எந்த ஒரு மோஷன் போஸ்டருக்கும் கிடைக்காத 4 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள், 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் 'விஸ்வாசம்' மோஷன் போஸ்டருக்குக் கிடைத்துள்ளது.
2.0 படம் நாளை வெளிவரும் பரபரப்பிலும், 2.0 பாடல் ஒன்று வீடியோவாக வெளிவந்த நிலையிலும், யு டியுபில் 'விஸ்வாசம்' மோஷன் போஸ்டர் தொடர்ந்து டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.