Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினிகாந்த், அடுத்து படமா, அரசியலா?

27 நவ, 2018 - 18:54 IST
எழுத்தின் அளவு:
What-Rajini-Next.?---cinema-or-politics

ரஜினிகாந்த் நடித்து இந்த ஆண்டில் ஜுன் மாதத்தில் 'காலா' படம் வெளிவந்தது. அடுத்து நாளை மறுநாள் '2.0' படம் வெளிவர இருக்கிறது. பொங்கலுக்கு 'பேட்ட' படம் வருகிறது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்படி அடுத்தடுத்து ரஜினிகாந்த் படம் வெளியாகிறது.

ஒரு படம் முடிந்தவுடன் தான் ரஜினிகாந்த் அடுத்த படத்தில் நடிப்பதை சமீப வருடங்களாக வைத்திருந்தார். ஆனால், 'கபாலி' படத்தில் நடிக்க ஆரம்பித்த சில மாதங்களில் '2.0' படத்தில் நடிக்க ஆரம்பித்தார். '2.0' படத்தில் நடித்து முடிப்பதற்குள் 'காலா' படத்தில் நடிக்க ஆரம்பித்தார். 'கபாலி, காலா' ஆகிய படங்கள், '2.0' படத்திற்கு முன்னதாகவே வெளிவந்தன.


'2.0' படம் வெளிவருவதற்குள் 'பேட்ட' படத்திலும் நடித்து முடித்துவிட்டார். '2.0' படம் ஆரம்பித்து வெளிவருவதற்குள் ரஜினிகாந்த் நடித்து முடித்த படங்கள் 'கபாலி, காலா, பேட்ட'.


ரஜினிகாந்த் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 'பேட்ட' படம் வெளிவந்த பின் ரஜினிகாந்த் அடுத்து படத்தில் நடிப்பாரா, பாலிடிக்சில் இறங்குவாரா என்பது தெரியவில்லை.

அடுத்த வருடம் மே மாதம் பார்லிமென்ட் தேர்தல் வேறு வர இருக்கிறது. ஜனவரி மாதம் ரஜினியின் அடுத்த படத்தை ஆரம்பித்தால் நான்கு மாதங்களுக்குள் முடிக்க வாய்ப்பில்லை. எப்படியும் ரஜினி, பார்லிமென்ட் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இன்னும் முழுமையாக அரசியலில் இறங்கவில்லை என்று ரஜினி கூறி வந்தாலும் அவருடைய பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதியன்று நிச்சயம் அரசியல் கட்சி குறித்து அறிவிக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

தெலுங்கில் பவன் கல்யாண் அரசியலில் இறங்கிய பின், இனி படங்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்துவிட்டார். ஆனால், தமிழில் அரசியல் ஆசையில் இருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in