தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் நடிகர் மகத் மற்றும் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தற்போது இருவரும், இணைந்து ஒரு படத்தில் நடிக்கின்றனர். ஹாலிவுட் இயக்குனர் ராண்டி கென்ட்டிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த பிரபு ராம், இப்படத்தை இயக்குகிறார்.
படம் பற்றி பிரபு ராம் கூறியதாவது : ரொமான்ட்டிக் - காமெடி படங்களின் ரசிகன் நான். எந்த மொழி, எந்த நாட்டு படமாக இருந்தாலும் பார்ப்பேன். எனக்கும் இந்த மாதிரி படங்கள் இயக்கும் ஆசை இருந்தது.
வட சென்னை பையன் மற்றும் வசதியான குடும்பத்தில் இருந்து வந்த பெண்ணை சுற்றி நிகழும் கதை. பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து தான் மஹத், ஐஸ்வர்யா தத்தா இருவரையும் இந்தப்படத்திற்கு தேர்வு செய்தேன் என்றார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது.