பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
கடந்த ஆண்டு மலையாள நடிகர் திலீப்பின் வாழ்வில் புயல் வீசியது என்றால் இந்த ஆண்டு அதற்கு அப்படியே முற்றிலும் மாறாக வசந்தம் வீச தொடங்கியுள்ளது. ஆம், சமீபத்தில் தான், மீண்டும் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையான திலீப். தற்போது அந்த சந்தோசத்துடனேயே தனது இரண்டாவது திருமண நாளை ஜாலியாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
புரபெஷர் டிங்கன் என்கிற படத்தின் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து சென்றிருக்கும் திலீப், அங்கு படக்குழுவினருடன் தனது திருமண நாளை கொண்டாடினார். அதேசமயம் அவரது மனைவி காவ்யா மாதவனும், மகள் மீனாட்சியும் கேரளாவிலேயே இருக்கின்றனர்.
புரபெஷர் டிங்கன் படப்பிடிப்பு ஜனவரி மாதம் வரை தாய்லாந்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திலீப் நடிக்கும் படங்களிலேயே இந்தப்படம் முதன் முறையாக 3டியில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.